Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?மாஸ்க் மாட்டாம வந்து மாட்டிய வகையில்... தென்காசியில் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!

மாஸ்க் மாட்டாம வந்து மாட்டிய வகையில்… தென்காசியில் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!

- Advertisement -
- Advertisement -
பெட்ரொல் பம்ப் மாஸ்க்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனையில் 719 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் .

இன்று 10-ந்தேதி மட்டும் மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 5 பேருக்கும் , நெல்லை மாநகரில் 54 பேருக்கும் , மானூரில் 5 பேருக்கும் , நாங்குநேரி பகுதியில் 6 பேருக்கும் , பாளையங் கோட்டையில் 7 பேருக்கும் , பாப்பாக்குடியில் 6 பேருக்கும் , ராதாபுரத்தில் 5 பேருக்கும் , வள்ளியூரில் 12 பேருக்கும் சேரன்மகாதேவி பகுதியில் 8 பேருக்கும் , களக்காடு பகுதியில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடையநல்லூரில் 32 பேருக்கும் , செங்கோட்டையில் 5 பேருக்கும் வாசுதேவநல்லூரில் ஒருவருக்கும் , சங்கரன்கோவிலில் 13 பேருக்கும் , குருவிகுளம் , கீழப்பாவூர் பகுதியில் தலா 2 பேருக்கும் கடையம் பகுதியில் 4 பேருக்கும் , மேலநீலிதநல்லூர் பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி சாலைகளில் முககவசங்கள் அணியாமல் வாகனங்களை ஓட்டி சென்றவர்களிடமிருந்து கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் 09.04.2021 வரை மொத்தம் 30 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.