பாஜக., சட்டமன்ற குழுத் தலைவராக… நயினார் நாகேந்திரன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை நெல்லை லைஃப் ஸ்டைல்
bjp mla meet
bjp mla meet

பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வென்றது. 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வென்றது.

nainar nagendran
nainar nagendran

கடந்த 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், பாஜக சட்டமன்ற குழு தலைவரைத் தேர்ந்தெடுக்க தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

nainar nagendran1
nainar nagendran1

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் நன்றிதெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன்… பாரதிய ஜனதா கட்சியின் தமிழக சட்டமன்ற குழுத் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி நன்றி !!! தமிழக சட்டசபைக்குள் நான்கு பாஜக mlaகளாக செல்லும் நாங்கள் , தமிழக உரிமைக்காக ஓங்கி ஒலிப்போம் !! குரல் அடக்கப்பட்ட பல்வேறு நலிந்த மக்களின் குரலுக்கு இனி சட்டசபையில் குரல் உண்டு !! – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.