மதுரையில் ரெம்டெசிவர் மருந்து திடீர் நிறுத்தம்! மக்கள் நீண்டநேரம் காத்திருப்பு!

Published:

madurai hospital
madurai hospital

மதுரை: கொரோனோ பாதிக்கப்பட்டவர்களுக்கான ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்  மதுரையில்  நேற்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது. 
தமிழ்நாடு மருத்துவ கழகம் சார்பில் மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டது.

madurai medical college hospital
madurai medical college hospital

நேற்று ஒரு நாளில் 500  பாட்டில் மருந்துகள் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மருந்துகள் இருப்பு இல்லை என்று தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவகல்லூரி முன்பாக குவிந்தனர். 

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் திடிரென இன்று விடுமுறை என அறிவிப்பை ஒட்டியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நீண்டநேரமாக காத்திருந்தனர். அரசு போதிய அறிவிப்பு இல்லாத நிலையில் வீணாக அலைய விட்டதாகவும், திடிரென விடுமுறை அறிவிப்பு வெளியிட்டதால் மருந்துகள் கூட கிடைக்காத நிலையில் நோயாளிகளின் உயிரோடு போராடும் நிலையில் அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும்,  போதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இதனிடையே மருத்துவகல்லூரி முன்பாக கூடிய பொதுமக்களை போலிசார் அப்புறப்படுத்தினர்.

Related articles

Recent articles

spot_img