வெறிச்சோடிய சாலைகளில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
boys playing cricket in roads
boys playing cricket in roads

மதுரையில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின – வெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாடி இளைஞர்கள் மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் வீரியமுடன் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

இதனால் அத்தியாவசிய பொருள்களான காய்கறிகள், மளிகைகடைகள் மதியம் 12 மணியுடன் அடைக்கப்பட்டு மாநகர் முழுவதும் ஆள் நடமாட்டமின்றி வேறிச்சோடி காணப்பட்டு வருகிறது. இதனால் வழக்கமான நாட்களில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளான மேலமாசி வீதி, நேதாஜி சாலைகள் உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுவதால், அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலைகளில் நண்பர்களோடு கும்பலாக கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.

madurai roads
madurai roads

இதனை அவ்வழியாக அத்தியாவசிய பணிகளுக்காக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் எச்சரிக்கை செய்தும் அவர்களை உதாசீனம் செய்தவர் தொடர்ந்து விளையாடினர்.
மேலும், ஊரடங்கு இருந்தபோதிலும், ஆட்டோக்கள் கருப்பாயூரணி, பாண்டிகோயில், மேலமடை, சக்கிமங்கலம், வரிச்சூர், ராசாக்கூர், ஒத்தப்பட்டி, சிவகங்கை ரோடு ஆகிய பகுதிகளில் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு செயல்பட்டன.

மாஸ்க் அணியோதோரை பிடிக்க ஆர்வம் காட்டிய போலீஸார், ஆட்டோக்கள் இயக்கப்பட்டதை கண்டு கொள்ளவில்லை.
பஸ்கள் இயங்கவில்லை, ஆனால் ஆட்டோ போக்குவரத்து வழக்கம் போல செயல்பட்டதாக சமூக ஆர்வலர்கள் பலர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.