June 25, 2021, 12:55 am
More

  ARTICLE - SECTIONS

  அவமானம் ‘நரேந்திர மோதி’க்கு அல்ல!

  கல்கத்தா சென்ற போது - அவரையும் மே.வங்க மாநில ஆளுநரையும் அரை மணிநேரம் காக்க வைத்துள்ளார் மமதா பானர்ஜி!

  pm modi meeting in west bengal
  pm modi meeting in west bengal

  நேற்று பிரதமர் மோடி புயல் பாதிப்புகள் குறித்து விசாரிக்க கல்கத்தா சென்ற போது – அவரையும் மே.வங்க மாநில ஆளுநரையும் அரை மணிநேரம் காக்க வைத்துள்ளார் மமதா பானர்ஜி!

  மோடியைச் சந்திக்க எந்த துறை அதிகாரிகளோ, மாநில அரசின் தலைமைச் செயலாளரோ வரவே இல்லை என செய்தி!

  அரை மணிநேரம் காக்க வைத்து விட்டு – கடைசியில் மமதா மட்டும் வந்து சில ஆவணங்களைக் கொடுத்துவிட்டு – “எனக்கு மற்ற பார்வையாளர்களை சந்திக்க வேண்டி உள்ளது”- என்று கூறிவிட்டு விடுவிடு என்று போய்விட்டாளாம்!

  இது மிக மிக மிக மோசமான முன்னுதாரணம்! மோடி எதிரிகள் அப்படியே எக்களித்து துள்ளி குதிக்கலாம்! செமத்தியா அவமானப் படுத்திட்டாள்யா வங்காளப் பெண்புலி – என இறுமாந்து மகிழலாம்!

  ‘மானங்கெட்டுப் போய் திரும்பினான்யா மோடி’- என்று மகிழ்ச்சி வெறியில் கூவலாம்! ஆனால் இது மோடிக்கான அவமானம் அல்ல! ஒரு தேசத்தின் பிரதமர் – ஒரு மாநிலத்தில் புயல் வெள்ளச் சேதத்தை ஆராயப் போகிறார்! அவரை உரிய முறையில் சந்தித்து – அறிக்கையை அளிப்பது ஒரு மாநில முதல்வரின் கடமை!

  பா.ஜ.க… ஓ… பாஜக!

  இப்போதாவது மெத்தனப் போக்கைக் கைவிடுங்கள்! ஜனாதிபதியை விட்டாவது கேள்வி கேட்கச் சொல்லுங்கள்! மத்திய அமைச்சரவையைக் கூட்டி – மே.வங்க முதல்வர் மீது ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிடுங்கள்! ஆனால் இதை எப்படியும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் பாஜக!

  இது மற்ற மோடி எதிர்ப்பு வெறியர்கள் ஆளும் மாநிலத்துக்கும் பரவக் கூடும் – குறிப்பாக தமிழகம்! எதிர்க்கட்சியாக இருந்த போதே – மோடி கோ பேக் – கூவியவர்கள் நாளை மோடி அதிகாரபூர்வமாக தமிழகத்துக்கு விஜயம் செய்தால் கூட… கவர்னரைத் தவிர வேறு எவரும் வரவேற்கப் போகாமல் இருக்க கூடும்!

  மோடியை வெறுப்பேற்றுவதற்கே – தலைமைச் செயலகத்தில் அவரை இரண்டு மணி நேரம் உட்கார வைத்துவிட்டு – கடைசியில் மிக ஜூனியரான அமைச்சர் ஒருவரிடம் ஒரு ஃபைலைக் கொடுத்து அனுப்பக் கூடும்! இதெல்லாம் நடக்கும் என்று கூற முடியாது – ஆனால் மமதா செய்யும் போது நாமும் செய்தால் என்ன? – என்ற எண்ணத்தை நிச்சயம் உருவாக்கும்!

  மோடியை அவமதிப்பதுதான் அரசியலில் ஹீரோ ஆவதற்கும்… செக்கூலரிச காவலர் ஆவதற்கும்… அடிப்படை தகுதி எனக் கருதும் – அப்பட்டமான மோடி எதிர்ப்பு வெறியர்கள் பல்வேறு மாநிலத்திலும் உள்ளனர்!

  இன்று மமதா செய்ததை – நாளை உத்தவ் தாக்கரே செய்யக் கூடும்! பிணராயி செய்யக் கூடும்! அசோக் கெலட் செய்யக் கூடும்! சந்திரசேகர் ராவ் செய்யக்கூடும்! ஏதோ மோடியை எதிர்ப்பதாக இவர்கள் எல்லாரும் மகிழலாம் – ஆனால் இந்திய சட்டத்தின் PROTOCAL மரபுகளும் சிதைந்து சுக்கு நூறாகும்!

  இந்திய நாட்டின் பிரதமர் – ஒரு மாநிலத்துக்கு அதிகார பூர்வமாக விஜயம் செய்யும் போது – அந்த மாநில முதல்வர் எவரும் போய் வரவேற்கத் தேவையில்லை! பிரதமர் அவர் பாட்டுக்கு தலைமைச் செயலகத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பார்! அவரை சந்திக்க அந்த மாநில முதல்வரோ, முக்கிய அதிகாரிகளோ எவரும் வர மாட்டார்கள்!

  கடைசியில் ஒரு பியூன் வந்து அவரிடம் – “ஐயா/ அம்மா கொடுத்து விடச் சொன்னாங்க “- என்று ஒரு ஃபைலை மேஜை மீது வைத்துவிட்டுப் போய்விடுவார்! இந்த நிலை வந்தால் அன்றுதான் இந்தியா துண்டு துண்டாக உடைந்து சுக்கு நூறாகும்! அதன் முதல் வித்துதான் இன்று மமதா விதைத்து இருப்பது!

  போதும் மோடிஜி! போதும் அமீத் ஷா ஜி! பொறுத்துப் பொறுத்து… பொறுத்து… பொறுத்து… இப்போதாவது சாட்டையை சுழற்றாவிட்டால் 2024 ல் சாட்டை உங்களிடம் இருக்காது! நடந்திருக்கும் அவமானம் மோடி என்ற மனிதருக்கோ – கட்சித் தலைவருக்கோ அல்ல!

  அரசியல் சட்டப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற பதவியில் வீற்றிருப்பவருக்கு!

  • முரளி சீதாராமன்

  1 COMMENT

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,264FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-