லவ்ஜிஹாத்: காதல் போதை காலாண்டுதான்! இளம் இந்துப் பெண்ணின் திகில் மரணம்!

Published:

telangana girl suicide
Telangana Hindu girl Sravanthi became Shiekh Sameera to marry Salman, dies months after marriage (source: News18 Telugu)

ஜனவரி 7ம் தேதி காமாரெட்டி மாவட்டம் குமாஸ்தா காலனியைச் சேர்ந்த சல்மான் ஷேக்கை ஷேக் சமீரா என்ற ஸ்ரவந்தி (19) காதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது, இந்தப் பெண்ணிடம் அக்கம்பக்கத்தில் உள்ள பஜ்ரங்தள் சகோதரர்கள் கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல் பலமுறை எடுத்துச் சொன்னார்கள்…

“அம்மா! இப்போது எல்லாம் சுகமாகவே தெரியும். இவன் உன்னை உடலளவில் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் உனக்கும் உன் பெற்றோருக்கும் நரகத்தைக் காட்டுவான்” என்று கூறினார்கள். அப்போது அந்தப் பெண் கேட்கவே இல்லை.

” காதல் என்றால் உங்களுக்கு என்ன தெரியும்? அவர் அப்படிப் பட்டவர் இல்லை. நம் பூஜைகளை நாம் செய்து கொள்ளலாமாம். அவர்கள் தடுக்க மாட்டார்களாம்… சொன்னார். எனக்கோ என் காதலருக்கோ உங்களைப்போல் மதம் முக்கியம் இல்லை. காதல்தான் முக்கியம். என் பெற்றோரை விட அன்பாக பார்த்துக் கொள்வதாகக் கூறுகிறார்” என்று டயலாக்குகள் நிறையவே சொன்னாள்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

நூற்றுக்கு 99% கிளைமாக்ஸ் சீன், இதில் உள்ளது போன்றே உள்ளது. பிணமாக விழுவார்கள் அல்லது சேரக்கூடாத இடத்தை அடைவார்கள் அல்லது குழந்தை பெறும் இயந்திரமாக மாறி அடிமை வாழ்வு வாழ்வார்கள்.

லவ் ஜிகாத் கிளைமாக்ஸ் இதுதான்..! சொல்லிச் சொல்வி ஓய்ந்து போகிறோமே தவிர இதுபோன்ற காதல் விவகாரங்களில் நம் பெண்கள் காதிலேயே வாங்கிக் கொள்வதில்லை. ஆனாலும் நாங்கள் அதற்காக சொல்லுவதை விடுவதும் இல்லை என்கிறார்கள் அந்த பஜ்ரங்தள் சகோதரர்கள்!

நடந்தது இதுதான்..! News: Opindia

தெலங்கானா மாநிலத்தில் உள்ள கமரெட்டி மாவட்டத்தில், ஸ்ரவந்தி என்ற இந்துப் பெண் தனது மதத்தை மாற்றிக் கொண்டு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த காதலனுடன் திருமணம் செய்து கொண்டார். எனினும், அந்தத் திருமணம் ஒரு சில மாதங்கள்தான் நீடித்தது. கடந்த வாரம் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப் பட்டது.

சல்மானை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பெயரை ஷேக் சமிரா என்று மாற்றிய ஸ்ரவந்தி, மே 24 அன்று அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக நியூஸ் 18 தெலுங்கு தெரிவித்துள்ளது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

இந்தச் சம்பவத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்தினர் மோசமான நிலையில் இருந்த தங்கள் மகளின் உடல் குறித்து சந்தேகித்து, மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சல்மான், அவரது அத்தை மற்றும் மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். தேவுனிபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமரெட்டி மாவட்டத்தில் இந்திரா நகர் காலனியில் வசிக்கும் 19 வயதான ஸ்ரவந்தி, 2021 ஜனவரி 7 அன்று சல்மானை மணந்தாள். திருமணத்துக்காக அவர் தனது மதத்தை மாற்றிக் கொண்டு, இஸ்லாத்தில் இணைந்தாள். தன் பெயரையும் ஷேக் சமிரா என்று மாற்றிக் கொண்டாள்.

திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தம்பதியர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்நிலையில், ஷேக் சமீரா என்ற ஸ்ராவந்தி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது.

இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள், தங்கள் மகளின் கழுத்தில் காயங்கள் இருப்பதாகக் கூறினர். தங்கள் மகளை அடித்துக் கொலை செய்து விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்! மேலும் சல்மானும் அவரது குடும்பத்தினரும் தங்கள் மகளை மனரீதியாக துன்புறுத்தியது மற்றும் உடல் ரீதியாக சித்திரவதை செய்ததற்காக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img