இப்படியே லீவ் விடுங்க.. நல்லா வைச்சு செய்யறாங்க.. சிறுமியின் வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
girl - 2026

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டது. கடந்த இரு வருடமாக பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இடையில் 9,10,12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இரண்டாம் அலையின் தீவிரத்தால் மீண்டும் அடைக்கப்பட்டது.

1 வகுப்பிலிருந்து 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. அனைவரும் ஆல்பாஸ் என்ற நிலையில் பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடக்கூட முடியாமல் வீட்டிலேயே அடைந்து உள்ளனர்.

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இருவருமே இதில் அலுப்பு தன்மையை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் பல வீடுகளில் ஆண் பிள்ளைகள் விளையாட்டு என்ற நிலையில் பொழுதை தள்ள,.. பெண் பிள்ளைகளை வீட்டு வேலைகளில் தாய்மார்கள் பழக்கப்படுத்தி வருகின்றனர்.

ஒரு சிறுமியின் ஆதங்க வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படியே லீவ் விட்டுகிட்டேயிருங்க… படிக்கிறேனோ இல்லையோ.. பாத்திரம் கழுவ படிச்சுட்டேன்.. எங்க அம்மா என்னைய வைச்சு செய்யறாங்க…என்று பாத்திரம் கழுவிய படி கோபமாக பேசுகிறார் அந்த சிறுமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.