ட்விட்டர் சர்ச்சை பதிவு: நிர்வாகி மீது வழக்கு!

Published:

twitter
twitter

ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைப்படத்தில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனி நாடுகளாக காட்டப்பட்டதையடுத்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் பெற்றுள்ள சட்டபாதுகாப்பு அந்தஸ்து விலகிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இச்சூழலில் நேற்று ட்விட்டர் இணையதளத்தில் Tweef Life என்ற பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரையும் காணவில்லை

லடாக்கும் இல்லை. இரண்டுமே தனி நாடுகளாக வரைந்து காட்டியிருக்கிறது ட்விட்டர். இந்திய-சீன எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியான லே பகுதியை சீனாவுடன் சேர்த்து மத்திய அரசை உச்சக்கட்ட கோபத்திற்குள்ளாக்கியது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்
twitter - 2026

இது ட்விட்ரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

ட்விட்டரின் இந்தச் செயலுக்கு மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே உத்தரப் பிரதேசத்தில் வழக்கு தொடரப்பட்டுவிட்டது.

பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் காவல் துறையினர் ட்விட்டர் இந்தியாவின் மேலாண் இயக்குநர் (MD) மனிஷ் மகேஸ்வரி மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு காசியாபாத் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது.

twitter2 - 2026

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது இந்தியாவின் தவறான வரைபடத்தை தனது இணையதளத்தில் காட்டியதாக உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங்தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய ஐடி விதிகளுக்கு உடன்படாததால் அந்நிறுவனத்துக்கான சட்டப் பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதன் காரணமாக ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை பதிவுகள் இட்டாலும் அதற்கு ட்விட்டர் தான் பொறுப்பு.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img