
தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ‘தகவல் தொழில் நுட்ப’ அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், இந்த மசோதாவானது ‘தகவல் ஒளிபரப்பு’ அமைச்சகம் தொடர்புடையது . அந்த துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் அவர்கள். ஒரு மசோதா எந்த துறையை சார்ந்தது என்பது கூட தெரியாமல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளது வருந்தத்தக்கது.
அரசு அதிகாரிகள் கூட இதை கவனிக்காமல், ‘வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ’ என்ற ரீதியில் கடிதம் எழுதியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரதத்தில் உண்மையான அக்கறையோடு இல்லாமல் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாலேயே இப்படிப்பட்ட பெரும் தவறு நடைபெற்றுள்ளது.
இனி வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காது, கவனத்துடன் செயல்படுவது தமிழக அரசுக்கு நல்லது. முதல்வர், இதற்கு காரணமானவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பார் நம்புகிறேன்.
- நாராயணன் திருப்பதி. (செய்தி தொடர்பாளர், பாஜக.,)



