பாஜக., பேனர் கட்டினா தப்பு! திமுக.,ன்னா ஸ்டிக்கர்… போஸ்டரே ஒட்டலாம்! அதுவும் கோயிலில்!

Published:

ilanji temple - 2026

இலஞ்சி கோவிலில் அத்துமீறல்! இந்துக்களை மீண்டும் மீண்டும் சீண்டும் திமுக?!

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள பிரசித்திபெற்ற திருவிலஞ்சிக் குமாரர் கோவிலின் சுற்றுச்சுவர் மட்டுமல்லாது கோயிலின் நுழைவு வாயிலிலேயே அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை வரவேற்று திமுகவினர் ஒட்டியிருக்கும் திடீர் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒருமுறைகூட இதைப்போன்று கோவில் புனிதத்தை கெடுக்கும் வகையில் அதிமுகவினர் நடந்து கொண்டது கிடையாது, திமுக வந்ததும்தான் இப்படிப்பட்ட அநியாயங்கள் நடைபெறுகின்றன என்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்…

ilanji temple2 - 2026

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்கு வருவதால் அவரை வரவேற்று திடீரென திமுகவினர் சிலர் வந்து இப்படி போஸ்டர் ஒட்டிவிட்டு சென்றுவிட்டதாகவும், அதை அகற்ற முற்பட்டால் அமைச்சர் வரும் வேளையில் தேவையற்ற பிரச்சினையை திமுகவினர் உண்டாக்கிவிடுவார்கள் என்ற பயத்தினால் அகற்றாமல் வைத்திருக்கிறோம், அமைச்சர் வந்து சென்றபின் அகற்றிவிடுகிறோம் என்று பதிலளிக்கிறார்கள்!

அமைச்சர் மட்டுமல்ல முதல்வரே வந்தாலும் அவரை வரவேற்று கோவில் சுவரில் கட்சி போஸ்டர் ஒட்டுவது குற்றம் என்று தெரிந்திருந்தும், தென்காசி கோவிலில் ஆய்வு நடத்த வரும் அமைச்சரை வரவேற்க சம்பந்தமே இல்லாமல் இலஞ்சி கோவிலில் போஸ்டர் ஒட்டுவது அராஜகம் என்று தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுத்தால் தங்கள் வேலை பறிபோய்விடும் என்று அரசு ஊழியர்கள் பயப்படும் அளவிற்கு படுமோசமான காட்டாட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்…

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அறநிலையத்துறை அமைச்சரை வரவேற்க கோவில் வாசலில் போஸ்டர் ஒட்டும் திமுககாரர்கள், நீதித்துறை அமைச்சரை வரவேற்க நீதிமன்ற வாசலிலும், வருவாய் துறை அமைச்சரை வரவேற்க கலெக்டர் அலுவலக வாசலிலும், காவல்துறையின் அமைச்சரான முதல்வரை வரவேற்க அனைத்து காவல் நிலையங்களிலும் கட்சி போஸ்டர் ஒட்டுவார்களா? ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பார்த்தால் மட்டும் திமுகவினருக்கு ஏன் இவ்வளவு இளக்காரமாக தெரிகிறது?!

எப்போதுமே இந்து தெய்வங்களையும், அவர்களது வழிபாட்டு முறைகளையும் இழிவாக பேசுவதை இன்பமாக நினைத்து அதை செய்து கொண்டிருந்தவர்கள், திடீரென தேர்தல் நேரத்தில் மட்டும் ‘வேலை’ கையில் தூக்கி நாடகம் ஆடியதையெல்லாம் நம்பி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள் என்றால், கோவில் நுழைவாயிலில் மட்டுமா? கோவிலுக்கு செல்பவர்கள் எல்லோரது முதுகிலும்கூட திமுகவினர் போஸ்டர் ஒட்டத்தான் செய்வார்கள்!

  • S.சிவஆனந்த், BE,MBA.,
    மதுரை மண்டல துணை செயலாளர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு

தகவல் உதவி: குத்தாலபெருமாள்

Related articles

Recent articles

spot_img