மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு!

Published:

jasmine - 2026

உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு அளிக்கப்படுவதே புவியியல் சார்ந்த குறியீடாகும்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் மல்லிகை பூ விளைகிறது . இருப்பினும் மதுரை மல்லிக்கு என்று தனி பெருமையும் சிறப்பும் உண்டு. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தினை காப்பதற்கு இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

jasmine 1 - 2026

அந்த வகையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது மதுரை மல்லி என்ற பெயரில் மற்ற மல்லிகை பூவை விற்கவும், ஏமாற்றவும் முடியாது.

புவிசார் குறியீடு மதுரை மல்லிக்கு கிடைத்துள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதோடு, அதன் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் தட்டு, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு இவையெல்லாம் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் புவிசார் குறியீடுகளை பெற்றுள்ளது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

தமிழகத்தில் மதுரை மல்லி மிக பிரபலமானது. இதனால் மல்லிகையின் தலைநகராக மதுரை உருவாகியுள்ளதால் இது தமிழகத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாக மாறியுள்ளது.

Related articles

Recent articles

spot_img