விதிமுறைகளை நிறுத்தி வைத்த வாட்ஸ்அப்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தொழில்நுட்பம்
whatsapp
whatsapp

பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதனுடைய பாதுகாப்பு கொள்கைகளையும், பயன்பாட்டு விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ள்ளது.

இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பி வந்தது.

whatsapp
whatsapp

பயனாளர்களின் செல்போனுக்கு அனுப்பும் இந்த நோட்டிபிகேஷனை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் அக்கௌன்ட் நீக்கப்படும் என்று அறிவித்தது.

எனவே பயனர்கள் வாட்ஸ் அப்பில் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அப்படி ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் புதிய விதிமுறைகள் நிறுத்தி வைப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய தகவல் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகளை நிறுத்தி வைக்கப்படுவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.