செருப்பு அணிந்து பூமிபூஜை! உதயநிதிக்கு வலுக்கும் கண்டனம்!

Published:

uthanithi - 2026

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார், சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது.

தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.

கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். என்றார்

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img