அணில் குஞ்சுகளுக்காக ஒரு மாதம் ‘பைக்’ பயணத்தை தியாகம் செய்த கால்நடை மருத்துவர்!

Published:

squirrel2 - 2026

அணில்களுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம், தன் இருசக்கர வாகனத்தை எடுக்காமல் இருந்த அரசு கால்நடை மருத்துவர் இப்போது பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

மதுரை ஆனையூர் சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் மெரில்ராஜ். இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை வீட்டு முன் நிறுத்தி உள்ளார். இவரது இரு சக்கர வாகனத்தில் அருகே ஒரு அணில் அங்குமிங்கும் சென்றுள்ளது. இரு சக்கர வாகனத்தில் உள்ள இருக்கைக்கு அடியில் சென்று வந்துள்ளதை கவனித்துள்ளார் மெரில்ராஜ்.

squirrel - 2026

தொடர்ந்து அதன் போக்கை கவனித்த கால்நடை மருத்துவர், இருசக்கர வாகனத்தில், அணில் ஒன்று கூடு கட்டியிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் மெரில் ராஜ் கூட்டை கலைக்காமல், ஒரு மாதத்திற்கு விலை உயர்ந்த இருசக்கர வானத்தையும் எடுக்காமல் அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார். அணில் 3 குட்டி ஈன்றது. அதற்கு சிகிச்சையும் அளித்து வந்தார்.

squirrel1 - 2026

இது குறித்து அவர் கூறுகையில்: அணில் கூடி கட்டுவதற்காக நான் கூட்டைக் கலக்கவில்லை அணில் கூடு கட்டி, குட்டியிடும் வரை அழகாக இரு சக்கர வாகனத்தை மட்டும் தான் விட்டுக் கொடுத்து உள்ளேன். அதுவும், ஓர் உயிர் தான்! நம் மீதான நம்பிக்கையில் கூடு கட்டியது!

squirrel3 - 2026

அந்த அணிலின் நம்பிக்கையை, மனிதர்களாகிய நாம் வீணாக்க வேண்டாம். அதனால்தான், அந்தக் கூட்டை கலைக்காமல், அந்தக் குஞ்சுகள் வளரும் வரை இந்த வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றேன் என்றார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஒரு மாதத்துக்குப் பின்னர், அணில் குட்டிகளை தூக்கிச் சென்று அதன் இருப்பிடத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img