உங்கள் ஃபோனில் வைரஸ், ஹேக்கர்ஸ்.. கண்டறிந்து நீக்க.‌.!

cell phone
cell phone

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே, ஏதாவதொரு சமயத்தில் வைரஸ் மற்றும் மால்வேர் குறித்த சந்தேகம் இருக்கும்.

ஏனென்றால், உலகளவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஷாப்பிங் முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தையும் ஸ்மார்ட்போன் மூலம் மக்கள் எளிதாக செய்துவிடுவதால், இது சைபர்கிரைம் குற்றவாளிகளின் கண்களை உருத்தாமலா இருக்கும்?.

கண்கவர் விளம்பரங்கள், கவர்ச்சி லிங்குகள் ஆகியவற்றை ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு அனுப்பும் சமூகவிரோதிகள், இந்த லிங்குளை கிளிக் செய்து தங்கள் வலைக்குள் விழுபவர்களை தங்களின் டார்க்கெட்டாக மாற்றுகின்றனர்.

அதாவது, ஸ்மார்ட்போன் யூசர்கள் போலி லிங்குகளை கிளிக் செய்தவுடன், அந்த லிங்குகளில் இருக்கும் வைரஸ்கள், ட்ரோஜன்கள் மற்றும் மால்வேர்கள் உடனடியாக செல்போன்களில் ஊடுருவி, பணப் பரிவர்த்தனை தகவல்கள், தனிப்பட்ட தகவல்களை சேகரித்துக்கொள்கின்றனர்.

இதனைவைத்துக் கொண்டு குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்ளும் அவர்கள் பிளாக்மெயில் செய்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். போதுமான தகவல்கள் கிடைக்கும்பட்சத்தில், உரிய நபர்களுக்கு தெரியாமலேயே, வங்கியில் இருந்து முழுப் பணத்தையும் சுருட்டிவிடுகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
hackers
hackers

ஆப்பிள் மற்றும் ஆன்டிராய்டு என எந்த மொபைலாக இருந்தாலும், யூசர்களின் அனுமதியில்லாமல் சைபர்கிரைம் குற்றவாளிகள் ஸ்மார்ட்போன்களுக்கு நுழைய வாய்ப்பில்லை. யூசர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பயன்படுத்தும் மொபைலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மால்வேர்கள் என்பது கணிணிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவி சேதப்படுத்தும் மோசமான சாப்ட்வேர். மால்வேர்களில் வைரஸ், வார்ம்ஸ், டிரோஜன், ஆட்வேர், ரான்சம்வேர் என பல வகைகள் உள்ளன.

  1. நீங்கள் செல்போன் அதிகம் பயன்படுத்தாவிட்டாலும், அதனை தொடும்போது மிகவும் சூடாக இருக்கும். இது, உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறது என்பதற்கான அடையாளம். சமூகவிரோதிகள் மறைமுகமாக உங்கள் செல்போனை உபயோகித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  2. இணைய டேட்டா வேகமாக தீர்ந்து போதல் அல்லது தொலைப்பேசி கட்டணம் விரைவாக தீர்ந்து விடுதல், பேட்டரி சீக்கிரம் ஜீரோ நிலையை அடைந்தால், செல்போன்களில் வைரஸ் உள்ளது என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.
  3. வழக்கதுத்திற்கு மாறாக பல்வேறு விளம்பரங்கள் செல்போனில் தோன்றும். இது. தவறான சாப்ட்வேர் உங்கள் செல்போனில் ஊடுருவி மறைந்திருக்கிறது என்பதற்கான அறிகுறி. அவை விளம்பரங்களை திரையிடுவது மட்டுமல்லாமல் செல்போன் தகவல்களையும் திருடலாம்.
  4. உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஸ்பேம் மெசேஜ்ஜூகள், தொடர்புகளை சேகரித்து, அவர்களின் செல்போன்களையும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.
  5. நீங்கள் பதிவிறக்கம் செய்யாத சாப்ட்வேர்கள், லிங்குகள் மொபைலில் தங்கியிருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
  6. உங்கள் செல்போனில் இருக்கும் செயலிகளில், எவை அதிக டேட்டாவை உபயோகிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். செயலியின் உபயோகத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அந்த செயலியை உடனடியாக நீக்கிவிடுங்கள்.
  7. செல்போனில் இருக்கும் அனைத்து பயன்பாடுகளையும் ஒருமுறை பார்வையிடுங்கள். அதில் ஏதேனும் தேவையற்ற பதிவிறக்கங்கள் அல்லது லிங்குகள் இருந்தால் உடனடியாக நீக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தாத ஏதேனும் இருந்தால் அதனையும் நீக்கம் செய்யுங்கள்.
  8. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத இணையப் பக்கங்கங்களில் இருந்து எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
  9. எந்தவொரு செயலியை பதிவிறக்கம் செய்தாலும், அவை உங்கள் செல்போனில் மேற்கொள்ளக்கூடிய சில அனுமதிகளைக் கேட்கும். செயலியின் தன்மையைப் பொறுத்து, குறிப்பிட்ட அனுமதியை மட்டும் கொடுக்க வேண்டும்.
  10. கணிணியைப்போலவே செல்போன்களுக்கும் சில ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்து செல்போனை தேவையற்ற வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories