ஆப் உபயோகிக்க குறிப்பு எழுதி வைத்த தந்தை! பகிர்ந்த மகன்! வைரல்!

Published:

notes
notes

அனைத்தும் நவீனமாகி விட்ட சூழலில் நம்மை சுற்றி புதிய விஷயங்கள் உருவாகும் போது அதை பயன்படுத்த பழகி கொள்ள நமக்கு சிறிது நேரம் பிடிக்கும்.

குறிப்பாக நம் பெற்றோர்களுக்கு தற்போதைய நவீன வசதிகளை பயன்படுத்துவதில் கண்டிப்பாக பல சிரமங்கள் இருக்கும்.

உதாரணமாக நார்மல் டிவி-யை பயன்படுத்திய நம் பெற்றர்களுக்கு ஸ்மார்ட் டிவி-யை ஆன் மற்றும் ஆஃப் செய்வது கூட சற்று கஷ்டமாக தான் இருக்கும்.

ஸ்மார்ட் டிவிக்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் நமக்கு உதவ கூடிய பல ஆப்ஸ்களை மிக எளிதாக நாம் கையாளும் அதே நேரத்தில், பல நேரங்களில் நம்மை விட அதிக வயது மூத்தவர்கள் குறிப்பாக நம் பெற்றோர்களும் நாம் பின்பற்றும் நவீன வாழ்க்கை முறைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இன்டர்நெட் மூலம் நொடியில் செய்ய கூடிய பல எளிய விஷயங்களை பற்றி நாம் அவர்களுக்கு கற்று கொடுக்கிறோம். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க லோக்கல் ஏரியாவில் இருக்கும் ஆட்டோ மற்றும் டாக்சியை எதிர்பார்த்திருந்த காலம் போய், ஆப் மூலம் வாகனத்தை புக் செய்யும் தற்போதைய நவீன வசதிகள் குறித்து நம் பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டிய & பயன்படுத்தும் சூழல் இருக்கிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இந்நிலையில் ட்விட்டரில் ராகுல் குப்தா என்ற யூஸர் ஷேர் செய்து உள்ள அவரது அப்பாவின் நோட்ஸ் வைரலாகி வருகிறது. வாடகை ஆட்டோ மற்றும் டாக்சிக்களை இயக்கி வரும் பிரபல நிறுவனமான Uber-ன் App-ற்கு சென்று, ஒரு வாகனத்தை எப்படி புக் செய்ய வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிமுறைகள் அடங்கிய நோட்ஸ் தான் அது.

“Uber-ல் எப்படி புக் செய்வது என்பது பற்றிய எனது தந்தையின் குறிப்புகள்”என்ற கேப்ஷனுடன் அந்த நோட்ஸை ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார் ராகுல் குப்தா.

Uber App பயன்படுத்தி வாகனத்தை எப்படி புக் செய்ய வேண்டும் என்பதற்கான படிப்படியான டிப்ஸை தன் கைப்பட எழுதி இருக்கிறார் ராகுல் குப்தாவின் தந்தை.

அந்த நோட்ஸில் Uber App-ஐ கிளிக் செய்வதிலிருந்து எப்படி ஒரு வண்டியை புக் செய்து முடிப்பது என்பது வரை, டிப்ஸ்கள் தெளிவாக மற்றும் எளிமையாக புரியும்படி எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த போஸ்ட் கடந்த செப்டம்பர் 14 அன்று ஷேர் செய்யப்பட்டதில் இருந்து 8,800-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 500-க்கும் மேற்பட்ட ரீட்விட்ஸ்களையும் பெற்றுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இந்த நோட்ஸை பார்த்த பல நெட்டிசன்கள் தங்கள் தாய், தந்தை ஒவ்வொரு App-ஐயும் எவ்வாறு இது போல பயன்படுத்தி வருகிறார்கள் என்பது பற்றிய விஷயங்களை ஷேர் செய்தனர்.

“என் அம்மாவும் அவர் பயன்படுத்தும் வாட்ஸ்அப், யூடியூப் உட்பட எல்லா app-ற்கும் இது போலவே நோட்ஸ் எழுதி வைத்துள்ளார்”என்று ஒரு யூஸர் கூறி இருக்கிறார்.

மற்றொரு யூஸர் கூறுகையில் ” ஸ்மார்ட் போனிலிருந்து, feature போனுக்கு மாறி செட் ஆக நிறைய நேரம் எடுத்து கொண்டார். ஏனென்றால் ஏதாவது தப்பாகி விடுமோ என்ற மிகப்பெரிய பயம் அவரிடம் இருந்தது” என்றார். மற்றொருவர் “சூப்பர் ஸ்வீட் டாடி”என்று கமெண்ட் செய்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img