
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது
அத்துடன் அங்கிருக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் படம் பிடித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது. 4.2 ரிக்டர் அளவில் தொடர்ந்து அரை மணி நேரம் நீண்ட நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த நிலநடுக்கம் முந்தைய பதிவுகளை விட ஐந்து மடங்கு வலிமையானது என நாசா தெரிவித்துள்ளது.
இன்சைட் லேண்டர் 8,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இதனை பதிவு செய்தது இதுவே முதல் முறை. நாசா விஞ்ஞானிகள் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியைக் கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் .