கிளம்பும் போது சிக்கிய விமானம்! பீதியடைந்த பயணிகள்!

Published:

flight 1
flight 1

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து நேபாள்கஞ்ச் பகுதிக்கு இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் புறப்படுவதாக இருந்தது.

பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கான ஓடுதளத்தில் விமானம் வந்தபோது, எதிர்பாராத விதமாக விமானத்தின் இடதுபக்க டயர் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்தரையில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.

flight 2
flight 2

உடனடியாக அங்கு விரைந்த விமான நிலைய ஊழியர்கள், பயணிகளை விமானத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து புல்தரையில் சிக்கிய விமானம் மீட்பு வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டது. அதன்பின்னர் விமானம் மீண்டும் நேபாள்கஞ்ச் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

Related articles

Recent articles

spot_img