பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சேவா சமர்பன் என்ற பெயரில் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் 10 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு 300 நொடிகளில், அதாவது 5 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும். அந்த 10 கேள்விகளும் எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் கேட்கப்படும்.
10 கேள்விகளில் அதிக கேள்விக்கு பதில் அளித்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு பேர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் ஒருவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
https://quiz.mygov.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை தரவேண்டும். அதன்பிறகு சேவா சமர்பன் என்ற பக்கத்தை கிளிக் செய்து கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒரு நபர் பலமுறை போட்டியில் கலந்து கொண்டால் அவர்களது பெயர் நிராகரிக்கப்படும். அதே போல் MyGov ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.30,000, மூன்றாவது பரிசாக ரூ.20,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
PM @narendramodi completes 20 years as a head of Government today, 7th Oct. He has often described himself as a ‘Pradhan Sevak’, working for an ‘Aatmanirbhar Bharat’. Take this quiz on @mygovindia on various aspects of nation-building in these 20 years: https://t.co/nEYpBCltGN
— PMO India (@PMOIndia) October 7, 2021