விஜய் தேவரகொண்டா திருப்பதி கோவிலில் தரிசனம்! வைரலான புகைப்படங்கள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
vijay devarkonda 1
vijay devarkonda 1

நடிகர் விஜய் தேவரகொண்டா திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ படத்தில் நடித்து வருகிறார்.

vijay devarkonda 2
vijay devarkonda 2

இப்படத்தை, பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர், நடிகை சார்மி, பூரி ஜெகன் நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்டப் பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார்.

முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்தியப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘லைகர்’ படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் அமெரிக்காவில் துவங்கவிருக்கிறது. இதில், விஜய் தேவரகொண்டா-மைக்டைசன் காட்சிகள் படமாக்கவுள்ளன.

vijay devarkonda
vijay devarkonda

இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சென்று வழிபட்டுள்ளார்.

அவருடன், அவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் அம்மா உட்பட குடும்பத்தினரும் உள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.