ஐரோப்பாவில் கடுமையான நெஞ்சு வலி காரணமாக சிகிச்சைக்கு வந்த நபரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நெஞ்சு வலி காரணமாக, 56 வயதான ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு மேற்கொண்ட எக்ஸ்ரே பரிசோதனையில் மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம் அம்பலமாகியது.
நெஞ்சு வலி ஏற்பட்ட அந்த மனிதனின் இதயத்தில் ஒரு பெரிய சிமெண்ட் துண்டு சிக்கியிருப்பதை பார்த்த மருத்துவர்கள் மிகவும் திகைத்து போயினர்
ஐரோப்பாவை சேர்ந்த இந்த நபருக்கு நெஞ்சு வலியுடன் மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. போர்ப்ஸின் ஆன்லைன் அறிக்கையில், இந்த வழக்கு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சு வலியுடன் வந்த நபரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக அவரை ஒரு பெரிய நவீன மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
மருத்துவர்கள், உயிர்களை காப்பாற்றும் சேவையை செய்வதால், அவர்களை தெய்வங்களாக வணக்குகிறோம். சரியான நேரத்தில் சரியான மருத்துவரின் உதவி கிடைத்தால், நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நெஞ்சு வலியினால் பாதிக்கப்பட்ட இந்த நபருக்கும் அதேதான் நடந்தது. பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த மனிதனின் இதயத்திற்கும் நுரையீரலுக்கும் இடையில் ஒரு விசித்திரமான விஷயம் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இது கூர்மையான கல் போன்று காணப்பட்டது, இதன் காரணமாக, அவரது இதயத்தில் ஒரு துளையும் ஏற்பட்டு இருந்தது. இதற்குப் பிறகு சிக்கலான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உடனடியாக முடிவு செய்யப்பட்டது.
அதாவது, மருத்துவர்களின் உடனடி சிகிச்சை காரணமாக, இந்த நடுத்தர வயது மனிதனின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பிறகு, இதயத்தில் இருந்த சிமெண்ட் கல் அகற்றப்பட்டது.
இந்த துண்டு அங்கு எப்படி சென்றது என்பதும் அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) நோய் காரணமாக அந்த நபரின் முதுகெலும்பில், முறிவு ஏற்பட்டது.
இந்த பிரச்சனையை சரிசெய்ய, டாக்டர்கள் சில காலத்திற்கு முன்பு கைபோபிளாஸ்டி செய்தார்கள். இந்த சிகிச்சையில், முதுகெலும்பில் ஒரு சிறப்பு வகை சிமெண்ட் வைக்கப்படுகிறது. எலும்பின் நீளம் இயல்பாக இருக்கும் வகையில் சிமெண்ட் பொறுத்தப்படுகிறது.
இந்த வழக்கில், முதுலெம்பில் இருந்த சிமெண்ட் துண்டு வெளியே வந்து நரம்புகள் வழியாக இதயத்திற்கு சென்றது. இந்த கூர்மையான துண்டு நரம்புகள் வழியாகச் சென்று அந்த நபரின் இதயச் சுவரில் துளையிட்ட தோடு நுரையீரலையும் துளைத்தது. இதனால் அவருக்கு நெஞ்சு வலியும் மூச்சு திணறலும் ஏற்பட்டது