65 யை காதலித்து கரம் பிடித்த 25! வைரலான புகைப்படம்!

Published:

30 வயதாகியும், இன்னும் திருமணதிற்கு பெண் கிடைக்காமல் தேடி அலையும் 90’s கிட்ஸ்களின் எண்ணிக்கை அதிகம்.

தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. ஒரு பக்கம் தனக்கு வயதாகி விட்டது என்ற கவலையும், மற்றொரு பக்கம் வேலை சுமை, குடும்பம் நல்ல நிலைமைக்கு வரவில்லை என்ற கவலையும் இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது.

ஆனால் இப்படி தவிக்கும் 90’s கிட்ஸ்களை பொறாமை பட செய்யும் சம்பவம் ஒன்று தற்போது கர்நாடகா மாநிலத்தில் நடந்துள்ளது.

25 வயதான மேகனா என்ற பெண் ஒருவர், கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

சிக்கதனேகுப்பே கிராமத்தில், 65 வயதான சங்கரண்ணா என்ற தாத்தா ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மேகனாவுக்கும், இளைஞர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. ஆனால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், மேகனாவின் கணவர் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

தலைமறைவான அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் மேகனா வேறு திருமணம் செய்யவும் முடிவு செய்தார்.

இந்த நிலையில் மேகனாவுக்கு, 65 வயதான சங்கரண்ணா மீது காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த சங்கரண்ணாவிடம் காதலை தெரிவித்த மேகனா, சங்கரண்ணாவை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பம் தெரிவித்துள்ளார். இதற்கு பேரன் பேத்தி எடுத்த முதியவரான சங்கரண்ணாவும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து திங்கட்கிழமை சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்த காதல் ஜோடிகளின் திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் கழுத்தில் மலர் மாலையோடு ஜோடியாக இருக்கும் திருமண புகைப்படங்களை முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவின் காதலுக்கு ஆதரவாகவும், முதியவரின் வயது மீறிய காதல் திருமணத்துக்கு எதிராகவும் பொங்கி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img