
குட்டியை காப்பாற்ற தாய் யானை முதலையை காலால் மிதித்து கொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யானைகள் பொதுவாக அமைதியான விலங்காகவே அறியப்படுகிறது. அதன் வாழ்வியலுக்குள் நாம் நுழையாத வரை மட்டுமே. மீறினால் யானையைவிட ஆக்ரோஷமான விலங்கு வேறு எதுவும் இல்லை என சொல்லும் அளவுக்கு மாறிவிடும். அப்படியொரு சம்பவம் தான் இங்கும் நடந்துள்ளது.
நீர் குட்டையில் தாயுடன் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானையை அங்கிருந்த முதலை பிடிக்க முயல, தன் குட்டியை காப்பாற்ற வெகுண்டெழுந்த தாய் யானை முதலையை தன் காலாலேயே மிதித்து கொன்றுள்ளது.
இதனை கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளின் ஒன்றான ஜாம்பியாவில் சுற்றுலா சென்ற ஒரு குழு படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளது