எவ்ளோ பெரிய காய்கறி! கின்னஸ் சாதனை.. வைரலான வீடியோ!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
vegetable
vegetable

உலகின் மிகப்பெரிய காய்கறிகள் கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடிப்பது வழக்கம். இதுகுறித்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஷேர் செய்யப்பட்டு வைரலாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ள வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகின் மிகப்பெரிய காய்கறிகள் என்ற தலைப்பில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், இதுவரை கின்னஸ் உலக சாதனை படைத்த காய்கறிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது.

உலகின் மிகப்பெரிய காய்கறிகளை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பூசணிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி வரை பல்வேறு பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் அதனை விளைவிப்பவர்கள் புகைப்படங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை கின்னஸ் அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும் பலர் கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர். அதில், இதுகுறித்து கூற வார்த்தைகள் இல்லை மிகவும் அழகு என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “சூப்பர்…. பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது, இந்த வீடியோவை ஷேர் செய்ததற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். “ஆஹா!” வாவ் என்று நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்க பெண் ஒருவர் தனது கைகளை பயன்படுத்தியே பொருட்களை உடைக்கும் சாதனை வீடியோவை கின்னஸ் சாதனை அமைப்பு ஷேர் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளது.

மேலும் அதில் ஒரு நிமிடத்தில் அதிக ஆப்பிள்களை கைகளால் உடைத்து சாதனை படைத்தவர் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 40,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

முன்னதாக ஹாமில்டனுக்கு அருகிலுள்ள கொலின் மற்றும் டோனா கிரெய்க்-பிரவுன் தம்பதியினரின் சிறிய பண்ணையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி அன்று இந்த உருளைக்கிழங்கு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த தம்பதியினர் தங்கள் கேரேஜில் வைத்து அந்த உருழைக்கிழங்கை கொண்டு சென்று எடை போட்டு பார்த்துள்ளனர்.

அதில் உருழைக்கிழங்கானது 7.9 கிலோகிராம் (17.4 பவுண்டுகள்) எடை கொண்டது என தெரியவந்தது. இது வழக்கமான உருளைக்கிழங்கை போல அல்லாமல் மிகப்பெரியதாக இருந்துள்ளது.

அந்த உருளைக்கிழங்கிற்கு டக் என்று பெயரிட்டனர். இதனை தொடர்ந்து சில வாரங்களில், இந் உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமாகிவிட்டது. டக்கிற்கு அங்கீகாரம் பெற கின்னஸுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் இந்த தம்பதியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த உருளைக்கிழங்கு அங்கீகரிக்கப்பட்டால் இந்த வீடியோவும் விரைவில் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.