
நம்மில் பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனை தான் பயன்படுத்தி வருகிறோம். உலகின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட் ஃபோன் OS-ஆக இருப்பதால், ஹேக்கர்கள், மோசடி செய்பவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் டார்கெட்டாக ஆண்ட்ராய்டு ஃபோன்களாக இருந்து வருகின்றன.
எனவே ஆண்ட்ராய்டு யூஸர்கள் எதை டவுன்லோட் செய்கிறோம், எந்தெந்த ஆப்ஸ்கள் யூஸர்களின் தனிப்பட்ட தகவலை அணுகுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்ட்ராய்டு ஃபோனில் நாம் தெரியாமல் சாதாரணமாக செய்யும் சில தவறுகள் ஸ்கேமர்களுக்கு உதவும். அந்த தவறுகளின் பட்டியலை கீழே காணலாம்.,
புதிய ஆண்ட்ராய்டு ஃபோனை வாங்கியதும் அதிலிருக்கும் ப்ளோட்வேர்களை (Bloatwares) பலர் அப்படியே வைத்திருப்பார்கள். இது ஃபோனின் ஸ்பேஸை எடுத்து கொள்வதுடன் ஸ்டேபிளிட்டி சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே புதிய ஃபோனை வாங்கிய உடனேயே அவற்றை அன்இன்ஸ்டால் செய்து விடலாம். மேலும் ஃபோனுடன் வரும் பல ஆப்ஸ்கள் விளம்பரங்களை காட்டலாம், டிவைஸின் பயன்பாட்டை கண்காணிக்கலாம் மற்றும் கான்டாக்ட் லிஸ்ட்டை திருடலாம் என்பதால் தேவையற்ற ஆப்ஸ்களையும் அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஃபோன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை கண்காணிக்க உதவும் வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது தவறாகும்.
எனவே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் கூகுளின் ஃபைண்ட் டிவைஸ் சேவையை எனேபிள் செய்ய வேண்டும். அதே போல செட்டிங்ஸை மாற்றுவதன் மூலம் லாக் ஸ்கிரீனை பாதுகாக்க வேண்டும். இதனால் யாரும் மொபைல் டேட்டாவை முடக்கவோ அல்லது பாஸ்வேர்ட் இன்றி டிவைஸை ஆஃப் செய்யவோ முடியாது.
எப்போதுமே ஃபோனின் செட்டிங்ஸிற்குள் டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்ஸ் லிஸ்ட்டை செக் செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
ஏனென்றால் பல மால்வேர் அல்லது ஸ்பைவேர்கள் ஐகான் இல்லாமல் உங்கள் ஃபோனுக்குள் மறைந்திருக்கும். டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்ஸ் லிஸ்ட்டை முழுவதுமாக செக் செய்வது தெரியாத ஆப்ஸை கண்டறிய உதவும்.
நீங்கள் பல நாட்களாக பயன்படுத்தாத ஆப்ஸ் அல்லது காலாவதியான ஆப்ஸை போனில் வைத்திருப்பது மால்வேர் இன்ஃபெக்ஷன் ஏற்பட காரணமாக அமையலாம். எனவே பழைய அல்லது பயன்படுத்தப்படாத ஆப்ஸ்களை அவ்வப்போது சரிபார்த்து நீக்கிவிட வேண்டும்.
கூகுள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை மாதம் அல்லது வருட கணக்கில் மாற்றாமல் அப்டேட் செய்யாமலே வைத்திருப்பது ஆபத்தானது.
தனியுரிமை மீறல் ஏற்பட்டால் பாஸ்வேர்ட் மாற்றுவது உங்களை பாதுகாக்கும். எனவே உங்கள் கூகுள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை அவ்வப்போது மாற்றவும்.
நம்மில் பெரும்பாலானோர் நமக்கு தேவைப்படும் ஆப்ஸ்களை வெவ்வேறு தளங்களில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறோம்.
இதனால் மோசடி நபர்கள் உங்கள் போனை எளிதாக ஹேக் செய்ய முடிகிறது. எனவே செட்டிங்ஸில் இருக்கும் app installation from unknown sources என்பதை ஆஃப் செய்து வைக்க வேண்டும். அப்படி செய்யாமல் அனுமதி அளித்தால் மோசடி செய்பவர்களின் இலக்குக்கு ஆளாக நேரிடலாம்.
கூகுளால் அங்கீகரிக்கப்படாத பல ஆப்ஸ்கள் Google Play-ல் இருக்காது. எனவே பலர் அவற்றை APK ஃபைல்ஸ்களை டவுன்லோட் செய்வதன் மூலம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகின்றனர்.
எனினும் இவை Google-ஆல் அங்கீகரிக்கப்படாததால் ஆபத்துகள் இருக்கலாம்.
ஒரு App-ஐ இன்ஸ்டால் செய்யும் முன் அதன் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் அனுமதிகளை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு App அதிகப்படியான permissions-ஐ கேட்டல் நீங்கள் அதன் உண்மைத்தன்மையை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.