
அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.
ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், “எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா?” என்று கேட்டது. தவளையும், “நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றது.
அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.
அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.
தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.

அந்த சமயம்… தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.
இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.
நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். நம் உயிர் இந்த உலகை விட்டு பிரியும் போது எல்லாம் விட்டு செல்கிறோம், ஓடி ஓடி தேடிய பணம், புகழ், சொந்தம், உறவினர்கள் என எல்லாம் விட்டு செல்கிறோம்.

நாம் பரந்தாமனை இதயத்தில் நிறுத்தி அவரை நண்பராக/குருவாக ஏற்றுக்கொண்டு அனுதினமும் நம் வாழ்க்கை சக்கரம் சுழற்றுவோம், அனைத்தும் ஸ்ரீமந் நாராயணன் செயல் என்போம்,
இல்லையேல் சுண்டெலிக்கும்
தவளைக்கும் நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும். எத்தனையோ எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என்ற ஏக்க பெருங்கடலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவிகளை தவிர்ப்போம்