மம்மட்டஸ் மேகங்கள்: யாரெல்லாம் இதை பார்த்திருக்கீங்க..?

அடடே... அப்படியா? உலகம்
clouds
clouds

இயற்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது வானத்திலும், கடலிலும் நடக்கும் நிகழ்வுகள் மனிதர்களுக்கு பீதியையும், ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியன.
அப்படி ஒரு நிகழ்வு அர்ஜெண்டினாவில் நடந்துள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் பஞ்சுகளை குவியல் குவியலாக வானத்தில் வைத்தது போன்று மேகங்கள் உருவாகியிருந்தன.

இந்த நிகழ்வு அர்ஜெண்டினா நாட்டின் காஸா கிராண்டேவில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்தது.

இந்த மேகங்களுக்கு மம்மட்டஸ் மேகங்கள் என்று பெயர். இவை மற்றொரு மேகத்தின் அடிவாரத்தில் இருந்து வெளிப்படும் புடைப்புகளால் உருவாகிறது.

மேலும், இந்த மேகங்கள் இடியுடன் கூடிய மழை வரப்போகிறது என்பதையும் அல்லது ஆலங்கட்டி மழை வரப்போகிறது என்பதையும் குறிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிகழ்வை நேரில் கண்ட அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர், ‘நான் இந்த பூமியில் ஏறக்குறைய 40 ஆண்டுகளாக இருக்கிறேன், இதுபோன்ற மேகங்களை நான் இதுவரை பார்த்ததில்லை’ என்றார்.

அதேபோல் மற்றொருவர் கூறுகையில், ‘சனிக்கிழமை பிற்பகலில் வானம் இந்த அசாதாரண மேகங்களால் மூடப்பட்டிருந்தது.

பின்னர் மின்னல், காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் வலுவான புயல் வந்தது’ என்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

https://youtu.be/xXz_phObDtk

https://t.co/ObM7LUrv92″>https://t.co/ObM7LUrv92</a></p>&mdash; Carlos Juan Semidey (@QuakeChaser35)”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.