
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது.
அதன்படி ரயில் சேவைகளும் முடக்கப்பட்டன.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் மக்களின் தேவைகளுக்காக குறைந்த அளவிலான சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்துள்ள நிலையில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதனிடையே ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அதன்படி சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
டிசம்பர் 3, 10, 17, 24,31 மட்டும் ஜனவரி 7,10,12,14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும். இதனைப் போல சென்னை – எழும்பூர் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.