
ஒரு தெருவில், நல்ல இருட்டில் நாய் ஒன்று உலா வருகிறது. அதே தெருவில் சாலையில் கார் ஒன்றும் வருகிறது. திடீரென கார் நடுரோட்டில் நிற்கிறது. காரின் வெளிச்சம் மட்டும் சாலையில் படுகிறது.
இந்த நேரத்தில் எங்கோ நின்று கொண்டிருந்த நம்ம நாய்க்கு, எதிரில் காரின் விளக்கு எரிவதால், சாலையின் நிலை தெரியாமல், குத்து மதிப்பாக காரை நோக்கி வருகிறது.
காரை நெருங்கும் போது, சாலையில் நடுவே ஒரு வேகத்தடை ஒன்றில் கால் பட்டு தடுமாறுகிறது நாய்.
வந்த வேகத்தில் அது திரும்பி பார்க்கிறது. காரணம் அந்த சாலையில் அது பல முறை பயணித்திருக்கிறது. அதற்கு அந்த சாலை நன்றாகவே தெரியும். திடீர்னு ஸ்பீடு பிரேக்கர் எப்படி வந்தது என்ற சந்தேகம் தான் அந்த நாய்க்கு.
இப்போது போன நாய் அப்படியே யூடார்ன் போட்டு பார்க்கிறது. இப்போது அதற்கு கார் விளக்கு வெளிச்சம் தொந்தரவு செய்யவில்லை. மாறாக சாலையை தெளிவாக காட்டுகிறது.
சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை… அது ஒரு ராட்சத மலைப்பாம்பு, ரோடு கிராஸ் செய்து கொண்டிருந்த நேரம் என்பதும், அதை தான் சீண்டி விட்டோம் என்பதும் அப்போது தான் நாய்க்கு தெரிகிறது. ஒரு நிமிடம் உயிரை கையில் பிடித்து எஸ்கேப் ஆனது நாய்.