
கிரிக்கெட்… இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த வார்தைகளில் ஒன்று
உலக புகழ் பெற்ற இந்த கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தான் முதலில் விளையாடப்பட்டது என்றாலும் கூட இந்த போட்டிக்கு உலகளவில் இந்தியாவில்தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம்.
குழந்தைகள் முதல் முதிவர்கள் வரை இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கிரிக்கெட் போட்டியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளில் பங்கேற்கும்போது ரசிகர்கள் நிலை குறித்து நாம் உணர்ந்துகொள்ளலாம்.
முதலில் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக விளையாடப்பட்ட கிரிக்கெட் அதன்பிறகு ஒருநாள் (50 ஓவர்) போட்டியாக மாறியது. தற்போது ரசிகர்களின் ரசனையை அதிகரிக்கும் வகையில் டி20 மற்றும் டி10 போன்ற கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் டி20 மற்றும் டி10 போட்டிகளை மட்டுமே இளைஞர்கள் பலரும் ரசித்து வருகின்றனர். ஒருநாள் போட்டியும் ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் தற்போதைய நிலையில், டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இளைஞர்கள் தவிர்த்து முதியவர்களே அதிகம் டெஸ்ட் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பார்ப்பதற்கு இளைஞர்கள் மத்தியில் பொறுமை என்பது இல்லாததே காரணம்.
ஆனாலும் முதியவர்கள் தங்களுக்கு பிடித்தமான கிரிக்கெட் போட்டியை தொலைக்காட்சிகளில் கண்டு ரசித்து வருகினறனர். அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்த இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்த ஒரு ரசிகை அந்த போட்டி டிரா ஆனது குறித்து தனது கருத்தை கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பாட்டி ஒருவரிடம் டெஸ்ட் மேட்ச் எப்படி இருந்தது என்று கேட்கிறார். அதற்கு அவர், ரொம்ப மோசம் கடைசியில்… 9 விக்கெட் எடுத்துட்டாங்க ஒரு விக்கெட் எடுக்க முடியல மேட்ச் டிரா ஆகிடுச்சி… அதன்பிறகு யார் நல்லா பர்ஃபாம் பண்ணா என்று கேட்க.. எல்லாரும் நல்லாதா பர்.ஃபாம் பண்ணா ஸ்பின்னர்ஸ் நல்லாதா பண்ணாங்க ஆன கடைசியில ஒரு விக்கெட் எடுக்க முடியல டைம் இல்ல கடைசியில.. டைம் இருந்திருந்தா விக்கெட் எடுத்திருப்பா என்று கூறியுள்ளார்.
கடைசியில் டெயிலண்டர்கள் தான நின்னாங்க அவங்களுக்கு எப்படி ஆடனும்னு தெரியும் அப்படியே ஆடி டிராப் பண்ணிட்டா.. இந்தியாவுக்கு ஹோம் கிரவுண்டு அதனால பர்ஃபாமன்ஸ் நல்லா இருந்துச்சு… வோல்டு கப்ல நியூசிலாந்து கூட இந்திய தோத்தாங்க… பாகிஸ்தான் கூட படு மட்டமா தோத்தாங்க… சொல்ல முடியலபா டி20 எல்லாம் லக்கு ஒன்லி லக்கு விளையாட்டு திறமையெல்லாம் காட்டனும்ன டெஸ்ட்லதான் காட்டனும். ஆனா டெஸ்ட் மேட்சுனா 5 நாள் நல்ல பொழுது போகும். 5 நாளும் நல்லா விளையாடி கடைசியில் டிராப் பண்ணிட்டா என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில், சான்சே இல்ல பெஸ்ட் கிரிக்கெட்டர் என்று பாராட்டி வருகின்றனர்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களும், நியூசிலாந்து அணி 296 ரன்களும் எடுத்தது.
49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 234 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இதனால் கடைசி நாளில் 280 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி வெற்றிக்கான கடைசி விக்கெட்டை வீழ்த்த தவறியது ரசிகர்களை ஏமாற்றடைய செய்தது குறிப்பிடத்தக்கது.