
சமீபத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் வெடித்த விவகாரம் பூதாகரமானது. மிகவும் சர்ச்சைக்குரிய இந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது போக்கோ போன் வெடித்த தகவல் வெளியாகி பரவி வருகிறது.
இருப்பினும் இது முதல்முறை அல்ல, கடந்த செப்டம்பரில் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெடித்த போது இந்த சாதனம் வெடித்ததற்கு நுகர்வோர் தான் காரணம் என்றும் இந்த மாடல் ஸ்மார்ட்போன் வெடிப்பதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாத்தில் போக்கோ எஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்ததாக புகார்கள் எழுந்தது. இது வாடிக்கையாளர்களால் ஏற்பட்ட சேதம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போக்கோ ஸ்மார்ட்போன் மட்டுமின்றி பிற ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இதுபோன்ற புகார்களை எதிர்கொள்கின்றன.
91 மொபைல்ஸ் அறிக்கையின்படி, மகேஷ் (Mahesh08716488) என்ற பயனர் பெயருடன் டுவிட்டர் பயனர் ஒருவர் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் தீப்பிடித்த வெடித்ததாக டுவிட் செய்துள்ளார்.
அதேசமயத்தில் இது ஏன் நடந்தது இதற்கு என்ன காரணம் என்று அவர் குறிப்பிடவில்லை. இந்த கருத்துக்கு போக்கோ பதிலளிக்கவில்லை பின் இந்த டுவிட் குறித்து தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து. பின் இந்த டுவிட் நீக்கப்பட்டது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெடித்த புகைப்படமும் இதில் பகிரப்பட்டது.
இந்த டுவிட்டின் படி, போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் அடிப்பகுதி முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது. இருப்பினும் அதன் கேமரா தொகுதி மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
அதேபோல் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. போக்கோ இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதற்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளதாக நிறுவனம் உறுதி அளித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து பிராண்டுகள் தரம் குறித்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து சாதனங்கள் வெடிப்பு விவகாரம் நிகழ்வதால் சாதனத்தின் தரம் குறித்த பல கேள்விகள் எழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு பிராண்டுகளின் சாதனங்களிலும் இதேபோன்ற சிக்கல்கள் மீண்டும் மீண்டும் வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற விவகாரம் தொடர்ந்தால் பிராண்டுகளின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு அதிகரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த விலையில் சாதனம் வழங்க வேண்டும் என்ற முயற்சியின் காரணமாகவே ஸ்மார்ட்போன்களின் தரம் குறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
போக்கோ ஸ்மார்ட்போன் வெடிப்பு விவகாரம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் கடுமையான தர ஆய்வு செய்து தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொண்ட பிறகே சாதனங்கள் சந்தைப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
போக்கோ எம்3 ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் அம்சத்தோடு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான எம்ஐயுஐ 12 மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உட்பட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது.
டூயல் சிம் ஆதரவோடு வரும் இந்த ஸ்மார்ட்போன் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதியை கொண்டுள்ளது. இதற்கு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டிருக்கிறது.
தற்போது சம்பவம் குறித்து போக்கோ விசாரணை நடத்தி வருவதாகவும் அதற்கான காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்த தீர்வு விரைவில் வழங்கப்படும் என போக்கோ தெரிவித்துள்ளதாக நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. இதுகுறித்து போக்கோ நமக்கு ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கிறது.
இந்தியாவில் போக்கோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் மேலும் இதுபோன்ற விஷயங்களை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பதிவு குறித்து எங்கள் குழு தெரிவித்ததையடுத்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் தொடர்புகொண்டு அவரின் வருகைக்காக காத்திருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
சிக்கலை விரிவாக ஆராயவும் வாடிக்கையாளருக்கு எங்கள் ஆதரவை வழங்கவும், முன்னுரிமையின் அடிப்படையில் இதை தீர்க்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் எனவும் போக்கோ தெரிவித்துள்ளது.
சாதனம் பல்வேறு நிலைகளில் கடுமையான முறையில் சாதனத்தின் தரம் குறித்து உறுதிப்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்தோடு. இதற்கு எந்த நிலையில் நிறுவனம் சமரசம் செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.