தொடுதிரை வசதிக் கொண்ட கையுறை! புதிய வரவு!

Published:

Gloves - 2026

இந்த மாதிரியான சூழ்நிலையில் கையுறைகளை அணிந்துக் கொண்டு செல்போனைப் பயன்படுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருக்கின்றது.

ஆகையால் ஒவ்வொரு முறையும் கையுறை அணிந்துச் செல்லும் ரைடர்கள் அதனைக் கழட்டியே செல்போன் பயன்படுத்துகின்றனர்.

இந்த அவல நிலையைப் போக்கும் பொருட்டே ஸ்டீல்பேர்டு நிறுவனம் புதிய கையுறையை அறிமுகம் செய்திருக்கின்றது.

செல்போன் மட்டுமின்றி சில இருசக்கர வாகனங்களிலும் தொடுதிரை வசதிக் கொண்ட திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுமாதிரியான அம்சங்களைப் பயன்படுத்த நிச்சயம் இந்த கையுறை உதவும் என தெரிகின்றது. ஸ்டீல்பேர்டு நிறுவனம் இப்புதிய கையுறைக்கு இந்திய மதிப்பில் ரூ. 599 விலை நிர்ணயித்துள்ளது.

இந்த கையுறை இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். முழுமையாக கையை மூடும் வகையிலும், பாதியாக கையை மூடும் வகையிலும் இந்த கையுறை விற்பனைக்குக் கிடைக்கும்.

மேலே பார்த்த விலையானது முழுமையாக கைகளை மூடும் குளோவ்ஸின் விலை ஆகும். பாதியாகக் கைகளை மூடக் கூடிய கையுறையின் விலை ரூ. 529 ஆகும்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இத்தகைய குறைந்தபட்ச விலையிலேயே விபத்து போன்ற அசம்பாவிதங்களில் கைகளையும், கை விரல்களையும் காக்கக் கூடிய கையுறையை ஸ்டீல்பேர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மோட்டார்சைக்கிள் பயனர்கள் மட்டுமின்றி ஸ்கூட்டர் பயனர்களும் இந்த கையுறையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கையுறை மிக சிறந்த கிரிப்பான அனுபவத்தையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. சிறந்த ஹேண்ட்லிங்கை கவனத்தில் கொண்டு இந்த வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

முழு கைகளையும் மூடக் கூடிய வசதியுடன் கிடைக்கும் கையுறையில் குஷன் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

பாதியாக மூடக் கூடிய கையுறையை சூயட் பாலிஸ்டர் ஃபேப்ரிக்கைக் கொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் பின்பக்கத்தில் ரிப்பட் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், மிக சிறந்த கிரிப்பிற்காக உள்ளங்கை பக்கத்தில் சிந்தெட்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகையால் எந்த நேரத்திலும் இந்த கையுறைகளினால் எரிச்சலான அனுபவம் ஏற்படாது என்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மெட்டீரியல்கள் அனைத்து கால நிலைக்கும் ஏற்றது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நல்ல காற்றோட்டத்தை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதனை மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டுமின்றி ஜிம், மலை ஏறுதல், சைக்கிளிங் மற்றும் கேம்ப் போன்ற பயணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஸ்டீல்பேர்டு தெரிவித்துள்ளது. ஆகையால், இந்த கையுறைகள் பல வகைகளில் பயன்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Related articles

Recent articles

spot_img