ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனமானது ஜிடி தொடரில் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆகும். ஜிடி 2 ப்ரோவின் இந்தியா வெளயீடு சமீபத்தில் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டது.
இந்த போன் ஆனது இந்தியாவில் 2022 முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. சமீபத்திய வளர்ச்சி பிராண்ட் நாட்டில் ஜிடி 2 ப்ரோ உடன் நிலையான ஜிடி 2 சாதனத்தை கொண்டு வரும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மியின் இந்திய தளத்தில் ரியல்மி ஜிடி 2 காணப்பட்டது.
91 மொபைல்ஸ், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவிடம் இருந்து ஒரு ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ரியல்மி ஜிடி2 பிராண்டின் இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இதில் இந்த பிராண்ட் விரைவில் இந்தியாவில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஜிடி 2 மற்றும் ப்ரோ மாடல் இரண்டும் ஒரே நேரத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை தவிர ரியல்மி ஜிடி 2 குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல் ஜிடி 2 ப்ரோ உடன் ஒப்பிடும் போது ரியல்மி ஜிடி 2 மலிவான மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட ரியல்மி ஜிடி 5ஜியில் மேம்படுத்தப்பட்ட அம்சத்தோடு வரும் எனவும் இது இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் கொண்ட மிகவும் மலிவு விலை சாதனமாக இருக்கும்.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ அறிவிக்கப்படும் தேதி குறித்த தகவல்
ரியல்மி டிசம்பர் 20 அன்று காலை 9 மணிக்கு ஒரு நிகழ்வை நடத்துகிறது. அதில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் பிராண்ட் ப்ரோ மாடலுடன் நிலையான ஜிடி2-ஐ அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதுகுறித்து பல கசிவுகள் மற்றும் வதந்தி தகவல்கள் வெளியாகின. இதில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனம் குறித்த அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதேசமயத்தில் வெய்போவில் WHYLAB-ன் பதிவில் ஆர்எம்எக்ஸ்3301 மாடல் எண் உடன் ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப் உடன் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் ரியல்மி ஜிடி 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது AnTuTu பெஞ்ச்மார்க் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. பெஞ்ச்மார்க் இயங்குதளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்ற முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இது வரும் என கூறப்படுகிறது.
இமேஜிங் பயன்பாட்டுக்கு என ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் பிரதான கேமராவை கொண்டிருக்கும் என வதந்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்மார்ட்போனின் புதிய கசிவுத் தகவலின்படி இந்த சாதனம் 50 மெகாபிக்சல் சென்சாரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அதேபோல் பிரதான லென்ஸுக்கு 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் ஷூட்டரை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஓஐஎஸ் தொழில்நுட்பம், ஆட்டோஃபோகஸ் மற்றும் இஐஎஸ் ஆதரவு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதேபோல் ஸ்மார்ட்போன் முன்பக்க அமைப்பு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 32 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமராவை கொண்டிருக்கும் எனவும் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ 5ஜி-ன் புதுப்பிப்பு வீதம் குறித்து எதுவும் தகவல் வெளியாகவில்லை. பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி யுஐ 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 அம்சத்தோடு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 125 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படிகிறது.
Realme GT 2 Pro ஸ்மார்ட்போனை தவிர சியோமி மற்றும் ஒன்பிளஸ் போன்ற பிற பிராண்டுகளும் 2022-ல் முதன்மை சாதனங்களாக அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
அது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் உடன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மற்றும் சியோமி 12 ஆகிய இரண்டு சாதனங்கள் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ரியல்மி சாதனம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது.
ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனானது சிஎன்ஒய் 4000 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய மதிப்பு ரூ.46,500 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.