1200 ஆண்டு பழைமையான கட்டடம்

Published:

தற்போது ஸ்ரீரங்கத்தில் தை தேர் உத்சவம் (பூபதி திருநாள் ) நடைபெற்று வருகிறது 30.01.2018 அன்று தேர் திருவிழா நடைபெறும் .. 

 ஸ்ரீரங்கம் தெற்கு ரங்கா ரங்கா கோபுரத்திற்கு மேற்கே இந்த தேர் தற்போது  நிலைபெற்று நிற்பதை நாம் காண்கிறோம் ..

ஆனால் ஸ்ரீரங்கத்தின் சரித்திரம் பேசும் “கோவில் ஒழுகு” இந்த தேர் .. வடக்கு உத்தர வீதியில் மேற்கு பகுதியில் அமைந்து இருந்ததாக கூறுகிறது ..

இன்றும் வடக்கு உத்தர வீதியில் வீடுகள் நேராக இல்லாமல் .. நடுவில் ஒரு 12-15 உள்வாங்கி  இருப்பதை காணலாம்  …  

பழைய ஆட்களுக்கு “Remington means typewriter” என்று ஒரு பழைய போர்டு இருந்த வீடு பகுதியில் அன்றைய தேர் இருந்த இடம் !!!

இந்த இடத்தில்தான் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாக தை தேர் நிலை கொண்டு இருந்தது ..

இதில் சேர மடம் என குறிப்பிட படும் மடம் .. தற்கால ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடம் .. இதில் தான் வைணவ பேரொளி ராமானுஜர் சுமார் அரை நூற்றாண்டு வசித்து வந்தார் .. 

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

நமது சரித்திரத்தின் தொன்மை என்ன வென்றால் .. 1000 வது ஆண்டு கொண்டாப்பட்ட ராமானுஜனுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட்டிடம் இருந்தாது .. ராமானுஜர் 1000 வருடத்துக்கு முன்பு இங்கே வந்த போதே அது 200 வருட பழமை வாய்ந்த மடம் அது ..

வெள்ளைகாரன் ஊரில் 100 வருட பழைய இடத்தை காசு குடுத்து .. பார்ப்பவர்களுக்கு .. இந்த தகவல் 

விஜயராகவன் கிருஷ்ணன்

Related articles

Recent articles

spot_img