swakatha - 2026

ரிஷிகேஷில் திருமணம் முடித்த நடிகை! வைரல் ஃபோட்டோஸ்!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா
swakatha - 2026

பிரபல நடிகையும், பாடகியுமான ஸ்வாகதா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்துள்ளார்.

பிரபல நடிகையும், பாடகியுமான ஸ்வாகதா கிருஷ்ணன், பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அக்‌ஷய் குமாரை, இமயமலை அடிவாரத்தில் ரிஷிகேஷில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இம்மாதம் 4ம் தேதி நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவரது இன்ஸ்டாகிராமிலும் புகைப்படங்களைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

தனது திருமண விழாவின் படங்களை பகிர்ந்து கொண்ட நடிகை ஸ்வாகதா, எங்கள் பெற்றோர்கள், எங்கள் குரு மற்றும் எங்களை ஒன்றிணைத்த அனைவரின் ஆசியுடன், நான் மார்ச் 4, 2022 அன்று ரிஷிகேஷில் ஆற்றங்கரையில் நடந்த அழகான திருமண விழாவில் அக்ஷய் குமாரை மணந்தேன்.

ஸ்வாகதா தமிழில் சில பாடல்களையும், காயல் மற்றும் இன்ட்ரா ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. நடிகை ஸ்வாகதாவுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.