train 2 - 2026

எச்சரிக்கை ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி..! வீடியோ வெளியிட்ட இரயில்வே!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
train 2 - 2026

ஓடும் ரயிலில் ஏறவேண்டாம் , படிக்கட்டில் பயணம் செய்யவேண்டாம் என ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது.

ரயிலின் ஓரத்தில் நின்று கொண்டு பயணம் செய்த ரயில் பயணி ஒருவர் தவறி ப்ளாட்பார்மில் விழுந்து விட்டார். அந்த ரயில்நிலையத்தில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் ஒருவர் தவறி விழுந்த பயணியை ஓடிசென்று காப்பாற்றியுள்ளார்.

மும்பை வடாலா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரயிலில் பயணி ஒருவர் ஓடிச் சென்று ஏறினார். ஆனால், அவர் தடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த பயணியை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பாய்ந்து வந்து அந்த பயணியை வெளியே இழுத்தார்.

இதனால் அந்த பயணி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

இந்த வீடியோவை மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் ஓடும் ரயிலில் ஏறினால் உயிருக்கு ஆபத்து என மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

கீழே விழுந்த பயணியை பாதுகாப்பு வீரர் ஆர்பிஎப் கான்ஸ்டபிள் நேத்ரபால் சிங் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளார். ரயில் பயணிகளே உஷார் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.