தீவிபத்து நடந்த கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய உத்தரவு

Published:

மதுரை:
மதுரை நகரில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 5க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கு இரையாகின. இதை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்யக் கோரி கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், கிழக்கு கோபுரம் அருகே வீர வசந்த மண்டபம் அருகே நடைபெற்ற தீவிபத்தில் பாரம்பரியமான அந்த மண்டபம் பெரும் சேதம் அடைந்தது. தீவிபத்தால் பாதிக்கப் பட்டு 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின. இந்நிலையில், தீவிபத்தால் பாதிக்கப் பட்ட பகுதியில் மேபுற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் நாளை காலைக்குள் காலி செய்ய கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராஜநாகலு, மாற்று இடம் கொடுத்த பின்னர் கடைகளை காலி செய்ய சொல்ல வேண்டும். இந்த நோட்டீஸால் 500 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img