787864 - 2026

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம்..

அடடே... அப்படியா?

குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் தொடர் கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் அங்கு திரண்டு வருகின்றனர்.

தமிழ்புத்தாண்டு உள்ளிட்டவை காரணமாக 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் குடும்பத்தினருடன் அருவிகளுக்கு குவிந்தனர். அவர்கள் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, செண்பகாதேவி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

787864 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.