தன்னையே வெட்டிய கேக் கலைஞர்! பிரமிக்க வைக்கும் வீடியோ!

cake - 2026

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் வித்தியாசமான உணவு வகைகள் வைரலாகி வருகின்றன.

வித்தியாசமான சுவையில் மட்டுமல்ல கற்பனைக்கு கூட எட்டாத வகையில் ஸ்மார்ட் போன், பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், கார், பைக் என பலவற்றையும் அச்சு அசலாக கண்முன் காட்டும் சாக்லெட் மற்றும் கேக்குகளை சமையல் கலைஞர்கள் விதவிதமாக உருவாக்கி வருகின்றனர்.

அப்படி ஒருபொருளை தத்ரூபமாக கேக்காக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர் சமையற் கலைஞர் நடாலி சைட்செர்ஃப். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், ஓவியக்கலைஞர், ஆசிரியர் மற்றும் பிரபல சமையற்கலைஞர் என பன்முகத் தன்மை கொண்டவர். குறிப்பாக மிக யதார்த்தமான கேக் சிற்பங்களை வடிவமைக்கும் நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

நடாலி சைட்செர்ஃப் தனது தத்ரூபமான, கலை வடிவத்துடன் கூடிய கேக் வடிவமைப்புகளுக்காக உலக அளவில் பிரபலமானவர், இதற்காக பல பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

self cake - 2026

அந்த அளவிற்கு கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாதவாறு நடாலி தனது ஸ்பெஷல் கேக்குகளை செய்து வருகிறார். இவரின் கேக்குகள் 2020 ஆம் ஆண்டில் இருந்து வைரலாகி வருகிறது.

2021ம் ஆண்டு நடாலி உருவாக்கிய வெங்காய கேக் அனைவரையும் மிரள வைத்தது. இது வெங்காயமா? இல்ல கேக்கா? என குழம்பியவர்களுக்கு அதனை நடாலி வெட்டிய போது தான் கேக் என்பதையே ஒப்புக்கொண்டனர்.

அந்த அளவுக்கு ‘வெங்காயமே வெட்கப்படும்’ படி கேக்கை உருவாக்கியிருந்தார் நடாலி. தற்போது மீண்டும் நெட்டிசன்களை மிரளவைக்க கூடிய கேக் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

நடாலி சைட்செர்ஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். முதலில் பார்ப்பவர்கள் ‘ஓ… பக்கத்தில் நிற்பது நடாலி உடையை இரட்டை சகோதரியா?’ என நினைப்பார்கள்.

ஆனால் ஒளியியல் மாயை உற்றுநோக்குவோர் கட்டாயம் மிரண்டு தான் போவார்கள். ஏனெனில் நடாலி சைட்செர்ஃப் தனது கையில் அச்சு அசலாக தனது முகத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட கேக்கை வைத்திருக்கிறார்.

கண், காது, மூக்கு, வாய், தலைமுடி… இவ்வளவு ஏன் கண் இமைகள் கூட அச்சு அசலாக நடாலி போலவே உள்ளன. அது கேக் தான் என்பதை உறுதி செய்ய நெற்றில் இருந்து ஒரு பிஸ் கேக்கை வெட்டி எடுத்துள்ளார்.

அதை உற்று பார்க்கும் போது பல பிளேவர் அடுக்குகளால் கேக் உருவாக்கப்பட்டுள்ள உண்மை விளங்குகிறது.

நடாலியின் திறமையை பார்த்து வியந்து போன இன்ஸ்டாகிராம் வாசிகள் பலரும் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

‘இது பார்க்கவே மிகவும் வித்தியாசமாக உள்ளது’, ‘என் கண்களை என்னாலேயே நம்ம முடியவில்லை’ என கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

4 நாட்களுக்குள் இந்த வீடியோவை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories