
தமிழகத்தில் முதன் முறையாக நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே காராப்பாடி-அணையப்பாளையம் சாலையில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு நவ காளியம்மன் விற்றிருக்கிறார்.
கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது. அதற்கு அடுத்து நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதி உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிதாக கோபுரம் கட்டப்பட்டு, சன்னதியில் மூலவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதன்முறையாக, 71 அடி உயரத்துக்கு நவகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனி மாதம் கும்பாபிஷேக விழா நடக்கவுள்ளதாக தெரிகிறது. திருப்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், தமிழகத்தில் முதன்முறையாக நவகாளி அம்மனுக்கு இங்கு தான், 71 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.