அவரு ஏன் வரலை..? திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

marriage 5 - 2026

திருமணம் நடைபெற இருக்கும் சமயம் பார்த்து மணப்பெண் கல்யாணத்தை நிறுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

அப்படியான சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்தேறியிருக்கிறது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (மே 29) கான்பூர் தேஹத் மாவட்டத்தில் நடைபெற இருந்த திருமணத்தை ஃபோட்டோகிராபரை நியமிக்கவில்லை எனக் கூறி மணப்பெண் திடீரென நிறுத்தியது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

மங்கல்புர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளுக்கும், போக்னிப்புர் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற இருந்தது.

இதற்காக வடமாநிலத்தவர்கள் வழக்கப்படி மணப்பெண்ணுக்கு மெஹந்தி சடங்குகள் நடத்தப்பட்டு, திருமணத்துக்கான அலங்காரங்கள் என கல்யாணவீடு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது.

இதனையடுத்து திருமணத்தின் முக்கியமான சடங்கு நடைபெற இருந்த சமயத்தில் மணப்பெண் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார்.

ஏனெனில் தனது வாழ்வின் முக்கியமான தருணத்தை படம்பிடித்து பதிவு செய்வதற்காக மணமகன் தரப்பில் இருந்து ஒரு ஃபோட்டோகிராபரை கூட நியமிக்கவில்லை என அவர் கூறியிருக்கிறார்.

இதனால் மிகவும் வருத்தத்துடனும், கோபத்துடனும் மணமேடையை விட்டு வெளியேறி அண்டை வீட்டிற்குச் சென்றிருக்கிறார் மணப்பெண்.

அவருடனேயே பின்னால் சென்ற உறவினர்கள், பெரியவர்கள் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. திருமணம் நடக்கும் நாள் குறித்தே கவலைப்படாத இவரா என்னை காலம் முழுக்க பார்த்துக்கொள்ளப் போகிறார்? என மணப்பெண் வேதனையுடன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து மணமகள் தனது முடிவில் இருந்து பின்வாங்காமலேயே இருந்திருக்கிறார்.

இதனிடையே இந்த விவகாரம் எப்படியோ காவல்துறை காதுக்கு சென்றிருக்கிறது. மங்கல்புர் காவல் நிலையத்தில் வைத்து இருதரப்பு வீட்டாரும் திருமணத்துக்கு செலவு செய்யப்பட்ட பணத்தை திருப்பிக் கொடுத்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

ஃபோட்டோ மற்றும் வீடியோகிராபரை பணியமர்த்தாததாலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார் என மங்கல்புர் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் டோரி லால் கூறியிருக்கிறார்.

ஆனால், திருமணம் நிறுத்தப்பட்டதற்கு வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்று கிராம மக்களிடையே சலசலப்பும் ஏற்பட்டது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்கள் வாயிலாக வைரலாக பரவி இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories