
Asus ROG Phone 6 சீரிஸ் கேமிங் ஸ்மார்ட்போன்களை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக ஆசுஸ் அறிவித்துள்ளது.
Asus ROG Phone 6 தொடர் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசுஸ் நிறுவனம் அதன் ஆர்ஓஜி தொடர் கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி உள்ளது. தைவானிய உற்பத்தியாளரான ஆசுஸ் நிறுவனம் அதன் ஆர்ஓஜி போன் 6 தொடர் சாதனத்தை ஜூலை 6 அன்று உலகளவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெளியீட்டு நிகழ்வானது நிறுவனத்தின் சமூகவலைதளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் எனவும் இந்த நிகழ்வில் ஆசுஸ் நிறுவனத்தின் கூடுதல் சாதனங்கள் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.
டுவிட்டரில் நிறுவனம் வரவிருக்கும் புதிய ஆர்ஓஜி போன் 6 தொடரின் போஸ்டரை பகிர்ந்துள்ளது. இதில் ஆர்ஓஜி போன் 6 ஜூலை 6 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த வெளியீட்டு நிகழ்வானது இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. வெளியீட்டு நிகழ்வின் நேரலையை பார்க்க விரும்புபவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளங்களை அணுகலாம்.
ஆசுஸ் ஆர்ஓஜி போன் 6 தொடரானது ‘For Who Dear’ என்ற வாசகத்துடன் டீஸ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய கேமிங் ஹெட்ஃபோன்களும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என ஆசுஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது புதிய ஸ்னாப்டிராகன் 8+ ஜென் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தின் பிற சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எஸ்ஓசி ஆதரவோடு வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசுஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி, ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி உள்ளிட்ட இரண்டு புதிய லேப்டாப்களை ஆசுஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஆசுஸ் ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி மற்றும் ஜென்புக் ப்ரோ 15 ஃபிளிப் ஓஎல்இடி உள்ளிட்ட சாதனங்கள் விண்டோஸ் 11 உடன் வருகிறது.
ஜென்புக் எஸ் 13 ஓஎல்இடி ஆனது ஏஎம்டி ரைசன் செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஜென்புக் ப்ரோ 15 பிளிப் ஓஎல்இடி லேப்டாப் ஆனது 12 தலைமுறை இன்டெல் கோர் செயலிகள் மூலம் இயக்கப்படுகிறது.

ஜென்புக் லேப்டாப் ஆனது 2 இன் 1 பயன்முறை வடிவமைப்போடு வருகிறது. இது 360 டிகிரி கீல் ஆதரவு உதவியோடு இதை டேப்லெட் ஆகவும் பயன்படுத்தலாம். இந்த லேப்டாப் ஆனது 15.6 இன்ச் 2.8கே (2,880×1,620 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது.
இந்த லேப்டாப் ஆனது 100 சதவீதம் டிசிஐ-பி3 வண்ண வரம்புடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இது ஆர்க் ஏ370எம் ஜிபியூ ஆதரவுடன் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரையிலான சேமிப்பகத்தைக் கொண்டிருக்கிறது.
ஹூட்டின் கீழ் இந்த லேப்டாப் ஆனது 12-வது தலைமுறை வரையிலான இன்டெல் கோர் ஐ7-12700எச் செயலி ஆதரவோடு வருகிறது. இது ஆர்க் ஏ370எம் ஜிபியூ ஆதரவுடன் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரையிலான சேமிப்பகத்துடன் இயக்கப்படுகிறது.
இந்த லேப்டாப்களின் ஆடியோ அம்சங்களுக்கு என டால்பி விஷன் மற்றும் அட்மாஸ் ஆதரவு ஆகியவை உடன் வருகிறது. இது முக அங்கீகாரத்துடன் கூடிய ஐஆர் கேமரா மற்றும் ஒற்றை மண்டல ஆர்ஜிபி கீபோர்ட் ஆதரவுடன் வருகிறது. மடிக்கணினிகளில் உள்ள இணைப்பு ஆதரவுகள் என்று பார்க்கையில், இது 2எக்ஸ் தண்டர்போல்ட் 4 போர்ட்கள், 1 எக்ஸ் எச்டிஎம்ஐ 2.0 போர்ட் மற்றும் வைஃபை 6இ ஆகிய ஆதரவோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 96 மணிநேர பேட்டரியைக் கொண்டுள்ளது.