மதுரையில் கொள்ளையடித்த நகை கைக்கு எட்டி வாய்க்குள் செல்லாத கதையாய்…

மதுரையில் அடகு கடையில் இருந்து அரை கிலோ நகையுடன் லாக்கரை தூக்கி சென்ற கும்பல், அதை உடைக்க முடியாததால் குப்பை வண்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடகுகடை லாக்கர் மதுரை ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் புதூர் ஜவஹர்புரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நகை வைக்கும் லாக்கர் பெட்டியை காணவில்லை. உடனே அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாக்கர் பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்தனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதற்கிடையில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை எடுக்க வந்தனர். அப்போது அங்கு ஒரு குப்பை வண்டியில் லாக்கர் பெட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த லாக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெட்டியை மீட்டு கடை உரிமையாளரிடம் கொடுத்தனர். அவர் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் அரை கிலோ நகை மற்றும் 21 ஆயிரம் ரூபாய் இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அடகு கடையில் கொள்ளையடிக்க வந்த ஆசாமிகள், லாக்கர் பெட்டியை உடைக்க முடியாததால் அதை வெளியே கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் போலீசார் நடமாட்டம் இருந்ததையொட்டி அந்த பெட்டியை குப்பை வண்டியில் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

725032 13 - 2026
ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories