அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்யும் சுல்தான் நாயகி..

Published:

தமிழில் வெளியான சுல்தான் புஷ்பா பட ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார்.

images 40 3 - 2026

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, நீண்ட காலமாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வந்தார். அந்த விருப்பம் ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. ‘வாரிசு’ படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கைவசம் சில படங்களும் இருக்கிறது. ராஷ்மிகா சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சத்தமே இல்லாமல் ஒரு அழகு சாதன நிறுவனத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்.

images 39 2 - 2026
டூ
747520 2b - 2026

அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார். முன்னணி கதாநாயகிகள் பலர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு ஓட்டல்கள், அழகு சாதன நிலையங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள். பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். அந்த புத்திசாலித்தனமான கதாநாயகிகள் வரிசையில் ராஷ்மிகாவும் தற்போது இணைந்திருக்கிறார் என திரையுலக பிரமுகர்கள் கூறிவருகின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img