
உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்கா ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு, இந்தியாவில் சென்னை, குஜராத்தில் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை மூடிவிட்டு வெளியேறப்போவதாக கடந்த 2021ம் ஆண்டு அந்நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க, இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முயற்சித்தது. ஃபோர்டு மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள குஜராத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கடந்த மே மாதம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையை எந்த நிறுவனம் வாங்கும் என்பது குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.