முதல் அமைச்சர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11ல் உறுதிமொழி எடுத்துவிட்டு ஒருநாள் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதற்கு முதல்வரின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டு 14-ந் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது .
சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான ஆகஸ்டு 14-ந் தேதியே மதுபானங்களை வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் குவிந்தனர். இதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் அன்றைய தினம் மட்டும் வழக்கமான நாட்களை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. இந்த நிலையில் ஆகஸ்டு 14-ந் தேதி எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 14-ந் தேதி மட்டும் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: முதல் அமைச்சர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட் 11ல் உறுதிமொழி எடுத்தார். தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் ஆகஸ்ட் 14-ம் தேதி ஒரே நாளில் 273.92 கோடி ரூபாய்க்கு மது பானங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தி.மு.க.,வின் பயங்கரமான கபட நாடகத்தால் எங்களை வியக்க வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.