இலவசங்கள் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் -தேர்தல் ஆணையம்

இலவசங்கள் குறித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் .

இதன்மூலம் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக அளித்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை எனக் கூறி வழக்கை 3 பேர் கொண்ட அமர்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. அதேநேரம் பிரதமர் மோடி, இலவசங்கள் மற்றும் அதுதொடர்பான அரசியல் கட்சிகளின் அறிவிப்புகள் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிக்கான நிதி ஆதாரம் திரட்டப்படுவது எவ்வாறு என்பது குறித்த உண்மை தகவலை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில், ‘தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக போதிய தகவல்கள் விளக்கப்படாமல் இருத்தல் மற்றும் இந்த வாக்குறுதிகளால் நிதி நிலைத்தன்மையின் மீது ஏற்படும் விரும்பத்தகாத தாக்கத்தை தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலின்போது அளிக்கப்படும் வாக்குறுதிக்கான நிதி ஆதாரத்தை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் அதற்கான திட்டங்கள், நிதி நிலை அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வரும் 19ம் தேதிக்குள் தங்களது தரப்பு ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய ஆலோசனையின்படி, தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விபரங்களை, தேர்தல் நடத்தை விதிகளின் (எம்சிசி) ஒரு பகுதியாக கருதப்படும் பிரமாணப் பத்திரத்தில் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் இத்திட்டத்திற்கு சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

images 66 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories