பெண்கள் சென்டிமென்டை வைத்து வியாபாரம்?: கலர்ஸ் சேனலுடன் கைகோத்த ஆர்யா!

Published:

சென்னை:
தமிழக ஊடக உலகில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு எதிர்பார்க்கப் பட்ட கலர்ஸ் சேனல் தமிழில் இன்று முதல் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சேனல் தேசிய அளவில் ஏற்கெனவே ஏழு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தி, கன்னடம், பெங்காலி, ஒடியா, குஜராத்தி என வடக்கத்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வந்த நெக்ஸ்ட் சேனல் கலர்ஸ் என மாற்றம் கண்டு தமிழில் இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

இந்த சேனல் ஒளிபரப்பு குறித்த அறிமுக நிகழ்ச்சி, செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. பொழுதுபோக்கு சேனலாக களத்தில் கால் பதிக்கிறது கலர்ஸ். இதில் சினிமா நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

இது ஒரு புறம் இருக்க, கலர்ஸ் சேனலின் நிகழ்ச்சிகள் குறித்த பட்டியல் கொடுக்கப் பட்டதுடன், முன்னோட்டம் திரையிட்டுக் காட்டப் பட்டது. இதில், நடிகர் ஆர்யா நடத்தும் ஒரு நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அதற்கு முன், கடந்த காலத்தில் நடந்த ஒரு பரபரப்பை நினைத்துப் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் திருமணம் ஆகாதவா்கள் பட்டியலில் ஆா்யா, விஷால் இருவரும் உள்ளனர். விஷால் நடிகா் சங்கம் கட்டி முடிந்த பின் தான் திருமணம் என்று சொல்லி வருகிறார். ஆா்யாவும் நடிகா் சங்கத்தில் வைத்துதான் திருமணம் என்று கூறி வருகிறார். இந்நிலையில் நடிகா் ஆா்யா பெண் தேடுவதாகவும், தனக்கு ஏற்ற துணையாக யாரைக் கருதுகிறாரோ அவரை தேர்ந்தெடுக்கப் போவதாகவும் சுயம் வரம் என்ற பாணியில் செய்திகள் வெளியாகியது. அதற்காக ஒரு தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் ஆர்யா. இதை நம்பி தமிழகத்தின் பெண்கள் பலர், அந்த குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முயற்சி செய்து தங்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்து, பாவம் போல் காத்திருந்தனர்.

ஆனால், அவர் கலர்ஸின் சீரியலில் நடிக்கிறார் என்பது, அண்மையில் தெரியவந்தது. அதற்கு ஏற்ப, கலர்ஸ் தொலைக்காட்சியின் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் அவர் போஸ் கொடுத்துக் கொண்டு நிற்கிறார். இந்த நிகழ்ச்சியின் விளம்பர தூதராக நடிகா் ஆர்யா செயல்பட்டு வருகிறார்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

ஆா்யா தனது வாழ்க்கைத் துணையை தோ்ந்தெடுப்பது போல் துவங்கப் பட்டுள்ள இந்த நிகழ்ச்சியிக்கு பிரம்மாண்ட செட்டு போட்டு படப்பிடிப்பிடிப்பை நடத்துகின்றனா். நடிகா் ஆர்யாவின் வாழ்க்கைத் துணையாக விருப்பம் தெரிவித்து சுமார் 18 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனராம். எங்கே போகுமோ இந்த விபரீத விளையாட்டு!?

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img