8 வது வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்

Published:

நாட்டில் அதிநவீன 8 வது வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ரெயில் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரெயில் சேவை இந்த 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும்.

செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும். இந்த ரெயில் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரெயில் சேவை இது. இந்த வந்தே பாரத் விரைவு ரெயில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!
Tamil News large 3218692 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img