
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளது இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளி யினருக்கு பெருமை சேர்த்துள்ளது.
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி சுனாக்,கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Posts by Sakthi Paramasivan.k:
- தீபாவளி சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சேர்த்தி சேவை!
- சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!
- ஆரியன்காவு கோயிலில் முக்கிய திருப்பணி!
- குருவாயூர் ஏகாதசி: லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்!
- ஐப்பசி பூரம்; ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் சிறப்பு ஆராதனை!



